Thursday, 4 February 2010

குட்டுப்பட்ட கூட்டம்!!

குட்ட குட்ட குனிந்தது ஒரு கூட்டம்
குட்டப்பட்ட கூட்டம் எழுந்தது ஒரு கட்டம்!

திடுக்கிட்டது குட்டிய கூட்டம்
தீட்டியது பல சதித்திட்டம்!

உடைத்தெறிந்தான் திட்டமெல்லாம்
குட்டுப்பட்ட கூட்டத்தில் ஒருவன்!

தளரவில்லை குட்டுப்பட்ட கூட்டம்
மீண்டும் மீண்டும் எழுந்தது!

விட்டுவிட்டது குட்டுவதை குட்டிய கூட்டம்
விடவில்லை தொடர்ந்து குட்டும் எண்ணத்தை!

மீண்டும் குட்டினால்
குட்டுப்பட்ட கூட்டம் வீழ்ந்துவிடுமா?
இல்லை எழுந்து வருமா?

3 comments:

  1. நண்பா, நல்ல கேழ்வி "குட்டுப்பட்ட கூட்டம் வீழ்ந்துவிடுமா?....இல்லை எழுந்து வருமா?". எல்லோரும் தமிழர் எழுச்சி கூட்டட்டுக்கு போனால்... வாய் கிழிய கத்துவினம், நாம் வீழ்ந்தே கிடக்க மாட்டோம்.... மிண்டும் எழுவோம் என்று ஆநால் அடுத்த வினாடி பொய் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திடுவிணம் ...............????????????????????

    பி.கு: எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்......... அதோடு இவ்வலவும் எழுத எனக்கு 38 நிமிடம் எடுத்தது அதனலே என்னை மன்னிப்பீர்கள் என்று நினைக்குரேன்....எடுத்த முயற்சிக்காவது

    ReplyDelete
  2. உங்களது கருத்துக்கு நன்றி. இது தமிழர்களுக்கு மட்டும் என்று இல்லை. உலகில் அடக்கப்படும் எல்லா இனமக்களுக்கும் பொருந்தும் என நினைகின்றேன்.
    உங்களது தமிழ் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ஐயா நீங்கள் கூறுவது சரிதான், இது "உலகில் அடக்கப்படும் எல்லா இனமக்களுக்கும் பொருந்தும்" என குறுவது ஆனால் மனித பிறவியின் குணமே தன்னை பத்தியும்..தன் சான்றோர் பத்தியும் சிந்திக்குற சில்லறை புத்தி தானே......நானும் மனிதன் தானே ??

    ReplyDelete