கல் மீது எறும்பு ஊர்ந்த கோடு போல
என் காதல் ஆனதுவோ....?
கல்லிற்கு எறும்பு ஊர்வது தெரிவதில்லை
எறும்புக்கு தான் கல்மீது போடும் கோடும் தெரிவதில்லை...
அதுபோலவே
தினம் நீ என்னை கடந்து சென்ற போதும் காதலில்லை
என்மீது நீ போட்ட காதல் கோடு உனக்கும் தெரியவில்லை
உன்னை சில நாள் காணாத போது உன்மீதிருக்கும் காதல்,
கல்மீது எறும்பு போட்ட கோடு போலல்லவா
என்மனதில் அழியாமல் இம்சிக்கின்றது!!!
நல்லா தான் இருக்கு, ஆனால் சொன்னால் தான் தெரியும் "என்மீது நீ போட்ட காதல் கோடு உனக்கும் தெரியவில்லை"??. சும்மா தெரியவில்லை..... தெரியவில்லை என்றால் எப்படி தெரியவரும்
ReplyDeleteஉங்களது அறிவுரைக்கு நன்றி! :)
ReplyDelete